தமிழகத்தை அடகு வைக்கும் துரோகக் கூட்டம்: அதிமுக - பாஜக கூட்டணி மீது ஸ்டாலின் விமர்சனம்

1 month ago 8

சென்னை: “இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து அதிமுகவை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள். அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணியே ஒரு ஊழல்தான். பாஜக தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள். சுயமரியாதையின்றி டெல்லிக்கு மண்டியிட்டு தமிழ்நாட்டை அடகு வைக்கும் துரோகக் கூட்டத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க விடையளிப்பார்கள்.” என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

முன்னதாக நேற்று, ‘‘அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தலை​மை​யில் 2026 தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலை சந்திக்க உள்​ளோம். பாஜக​வும், அதி​முக​வும் இணைந்து தமிழகத்​தில் கூட்​டணி ஆட்சி அமைக்​கும்’’ என்று சென்னை​யில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா அறிவித்தார்.

Read Entire Article