தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனையில் வட மாவட்டங்கள் முதலிடம்: அன்புமணி வேதனை

1 week ago 3

ராணிப்பேட்டை: “தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களைவிட, வட மாவட்டங்கள் டாஸ்மாக் மது விற்பனையில் முதலிடத்தில் இருப்பது வேதனை அளிப்பதாக” பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை பகுதியில் திருமண மண்டபம் திறப்பு விழா இன்று (ஏப்.30) நடைபெற்றது. இதில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, திருமண மண்டபத்தை திறந்து வைத்து பேசுகையில், “மாமல்லபுரத்தில் மே 11-ம் தேதி சித்திரை முழு நிலவு, பாமக வன்னியர் இளைஞர் பெருவிழா மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மிகப்பெரிய எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

Read Entire Article