“தமிழகத்தில் சாமானியருக்கு சொத்துவரி உயர்த்தப்படவில்லை” - அமைச்சர் கே.என்.நேரு

1 month ago 8

திருச்சி: “எதிர்க்கட்சிகள் சொல்வதுபோல் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு போய்விடவில்லை. தேர்தல் வர உள்ளதால் அரசியல் செய்வதற்காக இதுபோன்று பேசுகிறார்கள். அதெல்லாம் உண்மை இல்லை. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது. குடியிருப்பு பகுதிகளை வணிக வளாகம் ஆக மாற்றினால் அவர்களுக்கு வணிக பயன்பாட்டுக்கான வரி வசூல் செய்யப்படும்,” என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

திருச்சியில் இன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் கே.என்.நேரு பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் சொத்துவரி சாமானிய மக்களுக்கு உயர்த்தப்படவில்லை. 10, 15 ஆண்டு காலம் உயர்த்தாமல் இருந்த சொத்து வரியை திடீரென்று அதிகப்படியாக உயர்த்தினால் மக்கள் சிரமப்படுவார்கள் என்பதற்காக சொத்து வரியை உயர்த்துவதற்காக புதிய வழிமுறைகளை நகராட்சி நிர்வாகத் துறை எடுத்துள்ளது.

Read Entire Article