தமிழகத்தில் ஏப்.15 மீன்பிடித் தடைக்காலம் தொடக்கம்; 61 நாட்கள் அமலில் இருக்கும்

1 month ago 8

சென்னை: இந்த ஆண்டுக்கான மீன்பிடித் தடைக்காலம் வரும் 15-ம் தேதியன்று தொடங்குகிறது. 61 நாட்கள் இந்த தடைக்காலம் அமலில் இருக்கும். இதனால், அடுத்த வாரம் முதல் மீன்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க 61 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக் காலம் வரும் 15-ம் தேதியன்று தொடங்குகிறது. வரும் ஜுன் 14-ம் தேதி வரை மொத்தம் 61 நாட்கள் இந்த தடைக்காலம் அமலில் இருக்கும். இந்தத் தடை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த 20 ஆயிரம் விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடித் துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்படும்.

Read Entire Article