தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

14 hours ago 1

புதுடெல்லி,

மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று அதிகாலை நிலவரப்படி சென்னைக்கு கிழக்கே 500 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது. இந்தப் புயல் சின்னம் மேலும் தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதிக்கு இடையே நிலைகொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல்சின்னம் தெற்கு நோக்கி நகர்ந்து வலுவிழந்து நாளை மறுநாள் (26ம் தேதி) டெல்டா மாவட்டங்களுக்கு அருகே கரையேறி தமிழக நிலப்பரப்பு வழியாக அரபிக் கடலில் இறங்கும். இதனால் டிசம்பர் 26, 27ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அதிகாலை வேளையில் ஒரு சில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Read Entire Article