
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அ.பள்ளிப்பட்டிைய சேர்ந்தவர் வெங்கடேசமணி. இவரது மனைவி முனியம்மாள் (வயது 36). இவர் அ.பள்ளிப்பட்டியில் உள்ள மருந்து கடையில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று முனியம்மாள் மற்றும் மருந்து கடை உரிமையாளர் முருகேசன் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ஒடசல்பட்டி அருகே சிந்தல்பாடி பிரிவு ரோடு அருகே வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் முனியம்மாளின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.