
பாட்னா,
பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டம் டகொமா கிராமத்தை சேர்ந்த பாபு லால். இவரது குடும்பத்தினரான சீதா தேவி, மன்ஜத் ஒரன். ராணியா தேவி, டபோ மோஸ்மட் மற்றும் ஒரு குழந்தை அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இதனிடையே, பாபு லால் குடும்பத்துடன் சேர்ந்து மாந்திரீக வேலையில் ஈடுபடுவதாக அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் நம்பியுள்ளனர். பாபு லால் மாந்திரீகத்தால் கிராமத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதாக மூடநம்பிக்கையில் மூழ்கியுள்ளனர்.
இந்நிலையில், கிராமத்தினர் அனைவரும் சேர்ந்து நேற்று பாபு லால் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு பாபு லால் மற்றும் அவரது குடும்பத்தினர் மொத்தம் 5 பேரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர், 5 பேரின் உடலையும் அதேவீட்டில் வைத்து தீ வைத்து எரித்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் ஒரு குழந்தை மட்டும் உயிர் தப்பியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து வந்து கொல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கிராமத்தினர் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளா.ர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய எஞ்சியவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.