தமிழகத்தில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள்: தலைமைச் செயலாளர் ஆலோசனை

3 hours ago 1

சென்னை,

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சமூக ஊடகங்கள் மூலம் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் அவ்வப்போது வெளிச்சத்துக்கு வந்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன. பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. ஜெயராம் மற்றும் பல்வேறு துறை அரசு செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

Read Entire Article