தமிழகத்தில் அதிக பறவை இனங்கள் வாழும் இடமாக கண்டறியப்பட்டுள்ளது

1 month ago 5
192 வகையான பறவைகள் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ள ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகேயுள்ள எலத்தூர் குளத்தை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோரிக்கை விடுத்துள்ளார். 94 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குளத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் கருநாரை, மரநெட்டக்காலி, மஞ்சள் வயிற்று கதிர்குருவி, ஐரோப்பிய பஞ்சுருட்டான் உள்ளிட்ட பறவைகளும், அதில் 67 இனங்கள் மத்திய ஆசிய பறவைகள் வழித்தடத்தில் வந்து செல்பவை என்றும் பறவை ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் 173 பூச்சி இனங்கள், 110 தாவர வகைகள், 16 ஊர்வன வகைகள், 18 வகையான எட்டுக்காளிகள், 7 வகையான பாலூட்டிகள் உள்ளிட்ட 558 வகையான உயிரினங்கள் வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எலத்தூர் குளத்தை பார்வையிட்ட செங்கோட்டையன் மரக்கன்றுகளையும் நட்டார். 
Read Entire Article