தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்வு: நள்ளிரவு முதல் அமலாகிறது

1 day ago 3

சென்னை,

தமிழகத்தில் 78 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 1992-ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

இந்தநிலையில், ஏப்ரல் 1-ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளுக்கு இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. சென்னையில் பரனூர்,வானகரம்,சூரப்பட்டு ஆகிய 3 இடங்களில் உயர்த்தப்படுகிறது. வாகனங்களின் வகைகளின்படி 6 வகையான கட்டணங்கள் நிர்ணயித்து வசூலிக்கப்பட உள்ளது.

Read Entire Article