தமிழக வெற்றிக் கழக மாநாட்டு பணிகள் தீவிரம்

3 months ago 21

விக்கிரவாண்டி,

நடிகர் விஜய் கட்சியின் தமிழக வெற்றிக் கழக மாநாடு வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து மாநாட்டு பணிகள் நேற்று முன்தினம் பந்தல்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து மாநாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநாடு நடைபெறும் இடத்தை சமன்படுத்தும் பணிகள் பொக்லைன் எந்திரம் மூலம் நடைபெற்று வருகிறது.

மாநாட்டிற்கு வருகிற தொண்டர்களுக்கு உணவு, குடிநீர் தடையின்றி வழங்கும் பணிகள் மற்றும் கழிப்பறை அமைக்கும் பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாடு மேடை அமைக்கும் பணி சினிமா கலை அரங்க இயக்குனர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சில நாட்களில் மேடை அமைக்கும் பணியில் அவர்கள் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article