
சென்னை,
தமிழில் 'முகமூடி' படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, விஜய்யுடன் 'பீஸ்ட்' படத்தில் நடித்து கவனம் பெற்றார். தற்போது இவர் சூர்யாவுடன் 'ரெட்ரோ' படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தில் ருக்மணி என்ற கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு பாராட்டுகள் கிடைத்தது போல, விமர்சனங்களும் கிடைத்தது.
இதற்கிடையில் ரசிகர் ஒருவர் எக்ஸ் பக்கத்தில் பூஜா ஹெக்டேவின் படத்தை பதிவிட்டு, 'இந்த நிறம் தான் வேண்டும் என்றால் நிஜத்திலேயே அப்படி இருக்கும் ஹீரோயினை தேர்வு செய்திருக்கலாமே... பூஜா ஹெக்டேவை அவர் நிறத்திலேயே விட்டுவிடுங்க...' என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு நடிகை பிரியா ஆனந்த் சிரிப்பது போன்ற 'எமோஜி'யை பதிவிட்டு இருக்கிறார். இதையடுத்து பூஜா ஹெக்டேவை, பிரியா ஆனந்த் கலாய்த்து விட்டார் என்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து பிரியா ஆனந்திடம் கேட்டதற்கு, 'நோ கமெண்ட்ஸ்' என்று சிரித்தபடி பதில் சொல்லிவிட்டார்.
பூஜா ஹெக்டே, வருண் தவானுடன் 'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹாய்' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், விஜய்யுடன் 'ஜனநாயகன்' படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.