தமிழக மீனவர்கள் பிரச்னைக்காக இலங்கை தூதரகத்தை முற்றுகையிட வேண்டும்: செல்வப்பெருந்தகை பேச்சு

1 day ago 2

சென்னை: தமிழக மீனவர்களுக்கு பிரச்னை என்றால், காங்கிரஸ் மீனவர் அணி இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறினார். தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் மீனவர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜோர்தான் தலைமையில் நடைபெற்றது. சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராபர்ட் புரூஸ், சுதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது:
காங்கிரஸ் ஆட்சியின்போது மீனவர்களுக்கு எந்த பிரச்னையாக இருந்தாலும் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது மீனவர்களுக்கு எதிராக சிறை தண்டனை என பல்வேறு கொடூரங்கள் ஒன்றிய பாஜ ஆட்சியில் நடைபெற்று வருகிறது. 2014ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் பிரதமர் மோடி, ‘எந்த ஒரு மீனவரும் பாதிக்கப்பட மாட்டார், வலைகள் கிழிக்கப்படாது, படகுகள் சேதம் ஆகாது’ என வாக்குறுதி அளித்தார். தற்பொழுது அவரது அளித்த வாக்குறுதிக்கு எதிராக அனைத்தும் நடந்து வருகிறது. இதை ஒரு பிரச்சாரமாக தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் அணி எடுத்துக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு மீனவர்களுக்கு பிரச்னை ஏற்பட்டால் காங்கிரஸ் கட்சி மீனவர் அணி முன்னிலையில் நிற்க வேண்டும். சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட வேண்டும். தமிழ்நாட்டில் எந்த ஒரு மீனவர் பாதிக்கப்பட்டாலும் காங்கிரஸ் கட்சி உடனடியாக போராட்டத்தில் ஈடுபட வேண்டும். அதற்கான குரலை முதலில் காங்கிரஸ் கட்சி இனிமேல் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post தமிழக மீனவர்கள் பிரச்னைக்காக இலங்கை தூதரகத்தை முற்றுகையிட வேண்டும்: செல்வப்பெருந்தகை பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article