சென்னை: தமிழ்நாடு காங்கிரஸை வலிமைப்படுத்துவது குறித்து கட்சியின் 42 நிர்வாகிகளிடம் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நேற்று தனித்தனியே கருத்துகளை கேட்டறிந்தார்.
தமிழ்நாடு காங்கிரஸில், மாநிலத் தலைமைக்கு எதிராக அண்மையில் 20-க்கும் மேற்பட்ட மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் எம்.எஸ்.திரவியம் தலைமையில் டெல்லி சென்று, தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்றக்கோரி கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரை சந்தித்து புகார் அளித்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸின் மேலிட பொறுப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட கிரிஷ் சோடங்கர் நேற்று முன்தினம் சென்னை வந்தார். அவரை மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் ஹெக்டே உள்ளிட்டோர் வரவேற்றனர்.