தமிழக மீனவர்களை பாதுகாக்க உறுதியான நடவடிக்கை: மத்திய அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தல்

2 hours ago 1

சென்னை:“மீன்பிடித்தல் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையில் 2008-ம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் உணர்வை இலங்கை அரசு அலட்சியம் செய்து வருகிறது. மத்திய அரசின் வெளியுறவுத்துறை அரசியல் உறுதியுடன் நடவடிக்கைகள் மேற்கொண்டு, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்,” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கும் அதிக நீளம் கொண்ட கடற்கரையை பெற்றுள்ளது. 14 கடலோர மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்கள் மற்றும் கிராமங்கள் மீன்பிடி தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளன. இங்கு வாழும் மீனவர்களுக்கு வங்கக் கடல் தான் வாழ்வாதாரமாகும். கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது தொடர்ந்து நடைபெறுகிறது. அண்மைக் காலமாக, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை இலங்கை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

Read Entire Article