சென்னை,
தமிழக காவல்துறையில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு மூலம் நியமிக்கப்படும் நேரடி டி.எஸ்.பி.க்கள் எஸ்.பி. ஆக பதவி உயர்வு பெற்ற பிறகு அவர்களுக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கப்படும். இதன்படி ஐ.பி.எஸ் அந்தஸ்து வழங்க தகுதியான 26 எஸ்.பி.க்களின் பட்டியலை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது.
இந்த நிலையில், தமிழக பிரிவை சேர்ந்த 26 எஸ்.பி.க்களுக்கு இன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி நேரடியாக டி.எஸ்.பி.யாக பணியில் சேர்ந்த இவர்கள், மாவட்ட எஸ்.பி.க்களாகவும், துணை ஆணையர்களாகவும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.