
சென்னை,
தனுஷ், ராஜ் கிரண் நடித்த 'பவர் பாண்டி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தனுஷ் கடைசியாக இயக்கி, நடித்த 'ராயன்' படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' உருவாகியுள்ளது.
இந்த படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படம் வருகிற 21-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், படத்தின் டிரெய்லர் கடந்த 12-ம் தேதி வெளியாகி இருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லரை பார்த்து நடிகர் தனுஷை, ராஷ்மிகா மந்தனா பாராட்டி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,
'தனுஷ் சார், நீங்கள் எப்படி நடிகர், இயக்குனர், எழுத்தாளர், பாடகர், நடனக் கலைஞர், இசையமைப்பாளர் என அனைத்து வேலையையும் செய்கிறீர்கள்' என்று தெரிவித்திருக்கிறார். தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா 'குபேரா' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.