"மர்மர்" டிரெய்லர் நாளை வெளியீடு

3 hours ago 2

சென்னை,

ஹேமந்த் நாராயணன் 'மர்மர்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படமே தமிழில் உருவாகியுள்ள முதல் பவுண்ட் புட்டேஜ் ஹாரர் திரைப்படமாகும். பவுண்ட் புட்டேஜ் ஹாரர் திரைப்படங்கள் என்றால் திரைப்படத்தின் காட்சிகள் பெரும்பாலானவை டேப் ரெகார்டர், சிசிடிவி கேமரா பூட்டஜ் போலயே காட்சி படுத்திருப்பர். இதன் மூலம் உண்மையாகவவே அந்த அமானுஷ்ய சம்பவ உணர்வை அது பார்வையாளர்களுக்கு கடத்தும்.

இப்படத்தை ஸ்டான் அலோன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் `கபா கபா கபிஸ்து' என்ற வார்த்தை இடம்பெற்றது. படத்தின் ஒளிப்பதிவை ஜேசன் வில்லியம் மேற்கொள்கிறார்.ரோகித் படத்தொகுப்பை செய்கிறார். திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்களின் விவரத்தை விரைவில் வெளியிடுவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 'மர்மர்' செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. 'மர்மர்' திரைப்படம் வரும் மார்ச் மாதம் 7ம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

மர்மர் படத்தின் டிரெய்லரை படக்குழு நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

Read Entire Article