
சென்னை,
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அதிவேக பிராட்பேண்ட் இணைய சேவை வசதிகள் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளன. தற்போது இந்த சேவையானது 2 திட்டங்களாக வகுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தொடக்கப் பள்ளிகளுக்கு (50 எம்.பி.பி.எஸ். வேகம்) ரூ.710-ம், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு (100 எம்.பி.பி.எஸ். வேகம்) ரூ.900-ம் இணையச் சேவை கட்டணமாக விடுவிக்கப்படும்.
அதேபோல், இணையச் சேவைக்கான மாதாந்திர கட்டணத்தை வரும் ஏப்ரல் மாதம் முதல் இயக்குநரகம் வாயிலாகவே பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு நேரடியாக செலுத்தப்படும். எனவே, பி.எஸ்.என்.எல். இணைய சேவை தரவுகளை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் அதை உடனடியாக செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.