தனியார் பைக் டேக்சிகளுக்கு தடை விதிக்க கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

4 weeks ago 8

 

திருச்சி, டிச.20: ஆட்டோ தொழிலை பாதிக்கும் பைக் டேக்சியை தடைசெய்ய வலியுறுத்தி சிஐடியூ சார்பில் நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் லட்சக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோ தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விகுறியாக்கும் தனியார் கார்ப்ரேட் நிறுவனங்களின் வாடகை ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள், போன்றவை இயக்கப்படுவதால், ஆட்டோ தொழில் பாதிக்கப்படுகிறது.

எனவே அவற்றை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நேற்று மாநிலம் தழுவிய கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் சங்கத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்று கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

ஆட்டோ ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பொதுசெயலாளர் சிவாஜி கூறுகையில், தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ள ஓலா, யூபர் போன்ற நிறுவனங்களை தடை செய்து ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டத்தையும் சாலை மறியல்களையும் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்துவோம் என்று அறிவித்துள்ளனர்.

The post தனியார் பைக் டேக்சிகளுக்கு தடை விதிக்க கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article