சென்னை: திருமலா, ஜெர்சி நிறுவனங்கள், பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி அறிவித்துள்ளது. தயிர் விலையும் லிட்டருக்கு ரூ.5 அதிகரித்துள்ளது. சென்னை முதல் தென் மாவட்டங்கள் வரை பால் விற்பனையில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனமான ஆந்திராவை சேர்ந்த திருமலா நிறுவனம் இன்று (1-ந்தேதி) பால் விலையை அமல்படுத்தியது. மற்றொரு தனியார் நிறுவனமான ஜெர்சி வருகிற 3-ந்தேதி முதல் பால் விலையை உயர்த்துகிறது. இந்த நிறுவனங்கள் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 5 ரூபாய் வரையிலும் உயர்த்த முடிவு செய்துள்ளன.
The post தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு..!! appeared first on Dinakaran.