தனியார் பஸ் கண்டக்டர்கள் மோதல்

1 month ago 11

 

கோவை, ஜன. 11: கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் இருந்து மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்ல அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அடிக்கடி நேர பிரச்னையில் தனியார் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் மோதிக்கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதேபோல், நேற்று முன்தினம் காந்திபுரத்தில், 2 தனியார் பஸ் கண்டக்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ஈரோடு பசுவன்னாபுரத்தை சேர்ந்த பஸ் கண்டக்டர் ஜெயச்சந்திரன் (31) என்பவர் மற்றொரு பஸ் கண்டக்டர் வெள்ளலூரை சேர்ந்த பூபாலன் (50) என்பவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். இது குறித்து பூபாலன் காட்டூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் ஜெயச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post தனியார் பஸ் கண்டக்டர்கள் மோதல் appeared first on Dinakaran.

Read Entire Article