தனித்துவமான தலைவர்

1 day ago 3

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள், மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மட்டுமன்றி, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு மகிழ்வுடன் வாழ்த்து தெரிவித்தனர். இந்த கொண்டாட்டத்தில் கூட, தனக்கான முக்கியத்துவத்தை அவர் உருவாக்காமல், தமிழ் நிலத்திற்கான உரிமைகளுக்காக முழக்கமிட்டிருப்பது தேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக தனது பிறந்த நாளையொட்டி, வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதான் அவர் ‘தனித்துவம் நிறைந்த ஒரு மக்கள் தலைவர் என்பதை மீண்டும் உணர்த்தியுள்ளது’ என்கின்றனர் சமூக மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள்.

என்னுடைய பிறந்தநாள் வேண்டுகோளாக, உங்களுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். இன்றைக்கு தமிழ்நாடு தன்னுடைய உயிர்பிரச்னையான மொழிப்போரையும், தன்னுடைய உரிமை பிரச்னையான தொகுதி மறுசீரமைப்பையும் எதிர்கொண்டுள்ளது. இதன் உண்மையான நோக்கத்தை, நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு என்பது, நமது மாநிலத்தின் சுயமரியாதை, சமூகநீதி மற்றும் நம்முடைய சமூக மேம்பாட்டுத் திட்டங்களை ெபரிதும் பாதிக்கும். இதை நீங்கள் மக்களிடம் கொண்டு ெசல்லவேண்டும். ஒவ்வொருவரும் மாநிலம் காக்க எழுந்து நிற்க வேண்டும். இந்தியாவுக்ேக வழிகாட்டியாக நாம் போராட்டத்தை தொடங்கினோம்.

இப்போது கர்நாடகா, பஞ்சாப், தெலங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து நமக்கான ஆதரவுக்குரல் வந்துள்ளது. இதை பார்த்த ஒன்றிய அரசு இந்தியை திணிக்கவில்லை என்று சொல்கிறது. ஆனால் அதற்கான அனைத்து முன்னெடுப்புகளையும் எடுத்துக் கொண்டே இருக்கிறது. அதேபோல் தமிழ்நாட்டுக்கான தொகுதிகளை குறைக்க மாட்டோம் என்று மட்டும் தான் ெசால்கிறார்கள். தவிர, மற்ற மாநிலங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாட்டோம் என்று சொல்லவில்லை.

நாம் கேட்பது மக்கள் தொகை அடிப்படையில் ெதாகுதிகளை பிரிக்காதீர்கள். நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென்மாநிலங்களை தண்டிக்காதீர்கள். அப்படி நடந்தால் அதை தமிழ்நாடும், திராவிட முன்னேற்ற கழகமும் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாம் ஒரு உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் நலனையும், எதிர்காலத்தையும் யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம். தமிழ்நாட்டுக்காக நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும். தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும். இந்த வேண்டுகோள் தான் தமிழக முதல்வர் ஒரு தனித்துவம் வாய்ந்த தலைவர் என்பதை மீண்டும் ஒரு முறை பறைசாற்றியுள்ளது.

அதாவது இக்கட்டான அரசியல் சூழல்கள், நிதிசார்ந்த பிரச்னைகள், அரசின் சாதனைகளை பட்டியலிட்டும் காட்டவில்லை. இவை அனைத்திற்கும் மேலாக, தமிழ்நிலத்தின் தலையாய உரிமைகள் முக்கியம். அது சார்ந்த கொள்கை முரண்பாடுகளை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்ப்பது மிகவும் அவசியம். அதன் மூலம் தமிழகத்தின் தனித்துவத்தை ேதசத்திற்கு உணர்த்த வேண்டும் என்பதே அவரது பிரதான நோக்கம். இதை தனது பிறந்த நாள் விழா பொதுக்கூட்ட மேடையிலும் வெளிப்படுத்தியுள்ளார் முதல்வர். நம்முடைய தோழமை கட்சி தலைவர்கள் அனைவரும், ஒரே மேடையில் இணைந்திருக்கிறோம். நாம் தமிழ்நாட்டுக்கான உரிமைக்குரலை எழுப்புவதற்கான வாய்ப்பை இந்த மேடை வழங்கியுள்ளது. இந்த மேடையே உரிமைக்களமாக, வெற்றிக்கான அடித்தளமாக அமையும் என்று முழக்கமிட்டுள்ளார். இதனால் தான் தனித்துவமான முதல்வராக மட்டுமன்றி, தலைவராகவும் உயர்ந்து நிற்கிறார் அவர் என்கின்றனர் சமூக மேம்பாட்டு அமைப்புகளின் முன்னோடிகள்.

The post தனித்துவமான தலைவர் appeared first on Dinakaran.

Read Entire Article