
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்துவந்தார். இவரது அழகிய தோற்றம் காண்போரை வசீகரித்தது. யூடியூபர் ஒருவர் இவரை வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்யவே சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக மாறினார் அந்த பெண். அவரது தோற்றத்தை வைத்து அவருக்கு 'மோனலிசா போஸ்லே' என்று நெட்டிசன்கள் பெயர் சூட்டியுள்ளனர்.
காந்தக் கண் அழகி என மிகவும் கொண்டாடப்பட்ட மோனலிசாவுக்கு சினிமா வாய்ப்பு வீடு தேடி வந்தது. சினிமாவுக்காக அவர் மும்பை வரவழைக்கப்பட்டு அவரது தோற்றத்தையே மாற்றினர். திடீரென படத்தின் இயக்குனர் மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டதால் மோனலிசா சினிமா வாய்ப்பு தடைப்பட்டது. ஆனாலும் நகைக்கடை திறப்பு விழா, கடை திறப்பு விழாக்களில் பங்கேற்று வந்த மோனலிசா, தற்போது ஆளே மாறி போய் தேவதையாக காட்சி தருகிறார்.
இந்தநிலையில் மோனலிசா தனிப்பாடல் ஒன்றுக்கு நடிகர் உத்கர்சிங்குடன் இணைந்து நடித்துள்ளார். பாடல் காட்சியில் உத்கர்ஷ்சிங்குடன் வளைந்து நெளிந்து ஆடிய நடனம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது. இந்த பாடல் முழுவதும் விரைவில் யூடியூப்பில் வெளியாக இருக்கிறது.