சசிகுமார் நடிக்கவுள்ள 'வதந்தி 2' வெப் தொடரின் அப்டேட்!

4 hours ago 5

சென்னை,

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அதற்குப்பின் 'ஈசன்' படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இவரது நடிப்பில் வெளியான 'அயோத்தி' 'கருடன், நந்தன்' ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. அதனை தொடர்ந்து அபிஷன் இயக்கத்தில் 'டூரிஸ்ட் பேமிலி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மே 1-ந் தேதி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதனை தொடர்ந்து சசிகுமார் கடந்த 2022-ம் வெளியான 'வதந்தி' வெப் தொடரின் இரண்டாவது சீசனில் நடிக்க உள்ளார். வதந்தி தொடரின் முதல் சீசனில், எஸ்.ஜே.சூர்யா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகவுள்ள வதந்தி 2 தொடரில் சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த தொடரின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஆனால் சசிகுமார் டூரிஸ்ட் பேமிலி படத்தின் புரமோஷன் பணியில் இருந்ததால் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் இன்று முதல் இந்த தொடரின் படப்பிடிப்பில் சசிகுமார் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், படப்பிடிப்பு பணிகளை மதுரை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

Read Entire Article