தந்தையின் கனவை நனவாக்கிய ரிங்கு சிங்; வைரலான வீடியோ

4 hours ago 2

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனான ரிங்கு சிங், அவருடைய தந்தை கான்சந்த் சிங்கிற்கு பல லட்சம் மதிப்பிலான பந்தயத்திற்கு பயன்படுத்தும் பைக் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

ரிங்கு சிங்கின் தந்தை வீடு, வீடாக சென்று சமையல் கியாஸ் சிலிண்டரை விநியோகிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். அதில் வரும் வருவாயை கொண்டு ரிங்குவையும், குடும்பத்தினரையும் முன்னேற்றி இருக்கிறார். கான்சந்த் இன்றளவும் அவருடைய வேலையை தொடர்ந்து வருகிறார்.

அவருடைய குடும்பம் ஏழ்மையான சூழலில் இருந்தபோது, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இந்த இக்கட்டான நிலையில் இருந்து வெளி வருவதற்கு ரிங்கு உதவியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில், கவாசகி நிஞ்சா 400 ரக பந்தய பைக் ஒன்றை தந்தைக்கு ரிங்கு பரிசாக தந்திருக்கிறார். இது ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த பைக்கிலேயே ரிங்குவின் தந்தை அவருடைய வேலைக்கு புறப்பட்டு செல்கிறார். அதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சிலரே தந்தையின் கனவை நனவாக்குகின்றனர். கனவு பைக் ஒன்றை தந்தைக்கு பரிசாக ரிங்கு அளித்திருக்கிறார் என பதிவு பகிரப்பட்டு உள்ளது.

அவருடைய இந்த செயலுக்காக ரிங்குவை, ரசிகர்கள் பலர் சமூக ஊடகத்தில் புகழ்ந்து வருகின்றனர். கனவு மெய்ப்பட்டு உள்ளது என ஒருவரும், வாழ்த்துகள் என மற்றொருவரும் தெரிவித்து உள்ளனர். எனினும், நீங்கள் ஹெல்மெட் அணியவில்லை என்றும் ஒருவர் சுட்டி காட்டியிருக்கிறார்.

Read Entire Article