இன்றைய ராசிபலன் - 21.01.2025

3 hours ago 1

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் தை மாதம் 8ம் தேதி செவ்வாய்கிழமை

நட்சத்திரம்: இன்று இரவு 11.43 வரை சித்திரை பின்பு சுவாதி

திதி: இன்று பிற்பகல் 12.43 வரை சப்தமி பின்பு அஷ்டமி

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம்: காலை 10.30 - 11.30

நல்ல நேரம்: மாலை 4.30 - 5.30

ராகு காலம்: மாலை 3.00 - 4.30

எமகண்டம்: காலை 9.00 - 10.30

குளிகை: மாலை 12.00 - 1.30

கௌரி நல்ல நேரம்: காலை 1.30 - 2.30

கௌரி நல்ல நேரம்: மாலை 7.30 - 8.30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டமம்: பூரரட்டாதி, உத்திரட்டாதி

ராசிபலன்:-

மேஷம்

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். பழைய பாக்கிகள் வசூலாகும். இழுபறியாக இருந்த வேலையில் இனி வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

ரிஷபம்

பணம் தாராளமாக கிடைக்கும். தேவையற்ற பயம் நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள். அலுவலக கோப்புகளில் கவனம் தேவை. வியாபாரம் சூடு பிடிக்கும். தம்பதிகள் புரிந்து கொள்வர். தேகம் பொலிவுறும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மிதுனம்

தொழிலார்களின் விருப்பம் நிறைவேறும். காதல் திருமணம் பிரச்னையைத் தரும். மாணவர்களின் மந்தம் நீங்கும். அக்கம் பக்கத்தினர் உதவுவர். உத்யோகஸ்தர் வேலை பளு குறையும். பெற்றோர்களின் உடல் நலம் முன்னேறும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கடகம்

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மதிப்பார்கள். கல்லூரி செல்லும் பெண்கள் எதிர்பாலினரிடத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அவர்களால் அவமானம் ஏற்படலாம். குடும்பத் தலைவிகளுக்கு கருப்பை பிரச்சினை வரக்கூடும் இயற்கை வைத்தியத்தை நாடுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

சிம்மம்

பிள்ளைகளின் போக்கில் கவனம் தேவை. தொழிலாளர்கள் சுயமரியாதையுடன் நடத்தப்படுவர். அலுவலக பணிகளில் ஆர்வம் கூடும். கலைஞர்களுக்கு பணம் குவியும். ஏற்றுமதியில் ஆதாயம் கிடைக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

கன்னி

வேலையாட்கள் ஒத்துழைப்பர். நினைத்தது பலிக்கும். அதிகாரிகள் பொறுப்புகளை ஒப்படைப்பர். தாய்வழி உறவினர்கள் ஆறுதல் தருவர். பிள்ளைகள் திறன் மேம்படும். பயணத்தின் போது கவனம் தேவை. வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. மாணவர்களின் மதிப்பெண் விகிதம் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

துலாம்

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்ள. மனதில் இருந்து வந்த சஞ்சல மனநிலையில் குழப்பங்கள் தீரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள். வியாபாரம் சீராக செல்லும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

விருச்சிகம்

வழக்கு முடிவுக்கு வரும். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். விவசாயிகளுக்கு மகசூல் பெருகும்.கணவரிடம் வாக்குவாதம் வேண்டாம். மாணவர்களின் படிப்பாற்றல் கூடும். வாகன செலவு உண்டு. வியாபாரங்கள் சிறப்பாக இருக்கும். சகஊழியர்களிடம் நட்பு பாராட்டுவர்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

தனுசு

கலைத்துறையினருக்கு கடுமையான வேலைப்பளு ஏற்படும். நேரம் தவறி சாப்பிட வேண்டாம். அரசியல்துறையினருக்கு வீண் விவாதங்கள் ஏற்படலாம். கையிருப்புகள் கரையும். கடன் வாங்க நேரிடும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மகரம்

சோதனைகள் வெற்றியாக மாறும். அரசியல்வாதிகளுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கும்பம்

உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வுக்குரிய அறிவிப்பு வந்து சேரும். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலும் வரும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மீனம்

பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் இருப்பதால் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

Read Entire Article