ஆக்கி இந்தியா லீக்: பெங்கால் டைகர்ஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற சூர்மா கிளப்

2 hours ago 1

ரூர்கேலா,

6-வது ஆக்கி இந்தியா லீக் ரூர்கேலாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் - சூர்மா கிளம் அணிகள் மோதின. இதில் முதல் பாதியில் 2 கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது.

இதனையடுத்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் பெங்கால் டைகர்ஸ் முதல் கோலை பதிவு செய்தது. மேலும் அடுத்த கோல் அடிக்க முயற்சி மேற்கொண்டனர். இருப்பினும் 2-வது கோல் அடிக்க முடியவில்லை. இதன் மூலம் சூர்மா கிளப் 2-1 என்ற கணக்கில் பெங்கால் டைகர்ஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றியை பதிவு செய்தது.

சூர்மா கிளப் தரப்பில் பிரப்ஜோத் சிங் மற்றும் மனிந்தர் சிங் தலா ஒரு கோல் அடித்தனர். பெங்கால் தரப்பில் ஜுக்ராஜ் சிங் மட்டுமே கோல் அடித்தார். இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக பிரப்ஜோத் சிங் தேர்வு செய்யப்பட்டார். 

Read Entire Article