தண்ணீர் தொட்டியில் மயங்கிய பெயின்டர் மீட்பு

4 months ago 25

கோவில்பட்டி, அக். 8: கோவில்பட்டி அடுத்த இனாம்மணியாச்சியை சேர்ந்தவர் பரமசிவம் (55). பெயின்டரான இவர், புதுஅப்பனேரி பத்மாவதி கார்டனை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவரது வீட்டில் தரைமட்ட தண்ணீர் தொட்டியில் பெயின்ட் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். தகவலறிந்து தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் ராஜூ தலைமையில் கோவில்பட்டி நிலைய அலுவலர் சுந்தராஜ் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீர் தொட்டியில் மயங்கி கிடந்த பரமசிவத்தை மீட்டனர். பின்னர் அவர், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

The post தண்ணீர் தொட்டியில் மயங்கிய பெயின்டர் மீட்பு appeared first on Dinakaran.

Read Entire Article