'தண்டகாரண்யம்' படத்தின் 'அடியே அலங்காரி' பாடல் வெளியானது

3 months ago 16

சென்னை,

கடந்த 2019-ம் ஆண்டு அதியன் ஆதிரை இயக்கத்தில் 'அட்டகத்தி' தினேஷ் நடிப்பில் உருவான படம் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஆதியன் ஆதிரை இயக்கும் இரண்டாவது படம் 'தண்டகாரண்யம்'. இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

'அட்டகத்தி' தினேஷ், கலையரசன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பாலசரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, அருள்தாஸ் , யுவன்மயில்சாமி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். உமாதேவி, அறிவு, தனிகொடி, ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்து விட்டது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'அடியே அலங்காரி' என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை இயக்குனர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். 

காதலின் அலங்காரம் தண்டகாரண்யம் - முதல் பாடல்அடியே அலங்காரி ▶️ https://t.co/IcLq3MWWJn A @justin_tunes Musical ️ #Krishnaraj @Ananyabhat14 ✒️ @UmadeviOfficial#Thandakaaranyam @officialneelam @LearnNteachprod @AthiraiAthiyan @KalaiActor @Dineshoffical @Riythvikapic.twitter.com/SusLimRbTK

— pa.ranjith (@beemji) October 23, 2024
Read Entire Article