தேவையான பொருட்கள்:
மசாலா செய்ய
எண்ணெய்-1 தேக்கரண்டி.
மிளகு-1/2 தேக்கரண்டி.
சோம்பு-1/2 தேக்கரண்டி.
சீரகம்-1/2 தேக்கரண்டி.
பட்டை-1
கிராம்பு-2
சின்ன வெங்காயம்-5
பூண்டு-4
இஞ்சி-1 துண்டு.
கொத்தமல்லி-சிறிதளவு.
தேங்காய்-1 கைப்பிடி.
கசகசா-1/2 தேக்கரண்டி.
குக்கரில் செய்ய
எண்ணெய்-2 தேக்கரண்டி.
சின்ன வெங்காயம்-5
பூண்டு-3
கருவேப்பிலை-சிறிதளவு.
உப்பு-தேவையான அளவு.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
மல்லித்தூள்-2 தேக்கரண்டி.
தட்டப்பயிறு-1 கப்.
தக்காளி-1
கொத்தமல்லி-சிறிதளவு.
செய்முறை:
முதலில் கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிளகு ½ தேக்கரண்டி சீரகம் ½ தேக்கரண்டி சோம்பு ½ தேக்கரண்டி, பட்டை 1, கிராம்பு 2 சேர்த்து வதக்கி விட்டு 5 சின்ன வெங்காயம், பூண்டு 4, இஞ்சி 1 துண்டு, கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து மிக்ஸியில் போட்டுக்கொள்ளவும். இப்போது இத்துடன் 1 கைப்பிடி தேங்காய், ½ தேக்கரண்டி கசகசா சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.க்கரில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, சின்ன வெங்காயம் 5, பூண்டு 3, கருவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கவும். மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, மல்லித்தூள் 2 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கலந்துவிட்டு அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து கலந்துவிட்டு 2 நிமிடம் வேக விடவும். பிறகு 2 மணி நேரம் ஊற வைத்த தட்டப்பயிறு 1 கப்பை இத்துடன் சேர்த்துக் கொண்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துவிட்டு கடைசியாக பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து 5 விசில் விட்டு எடுக்கவும். கடைசியாக கொத்தமல்லி தூவி பரிமாறலாம். அவ்வளவு தான் சிம்பிளான தட்டைப்பயிறு குழம்பு தயார்.
The post தட்டப்பயிறு குழம்பு appeared first on Dinakaran.