திருவனந்தபுரம்: கேரளாவில் பள்ளி அரசு பொதுத் தேர்வுகளுக்கான பரபரப்பு தொடங்கி விட்டது. நேற்று முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் தொடங்கின. மொத்தம் 4,27,021 மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். இதற்காக கேரளாவில் 2964 மையங்களும், லட்சத்தீவில் 9 மையங்களும், வளைகுடா நாடுகளில் 7 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பிளஸ்- 2 தேர்வை மொத்தம் 4,44,693 மாணவர்கள் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு தேர்வுகள் காலையிலும், பிளஸ்-2 தேர்வுகள் பிற்பகலிலும் நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் வரும் 26ம் தேதி முடிவடைகிறது. பிளஸ்-1 தேர்வுகள் வரும் 6ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 4,13,417 மாணவர்கள் பிளஸ்-1 தேர்வு எழுதுகின்றனர்.
The post கேரளாவில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகள் துவக்கம் appeared first on Dinakaran.