தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மாற்றம்

3 hours ago 4

சென்னை,

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த கல்யாண சுந்தரம் எம்.பி. அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சாக்கோட்டை க.அன்பழகன் தஞ்சை வடக்கு மாவட்ட பொறூப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் சு.கல்யாணசுந்தரம், எம்.பி., அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக சாக்கோட்டை க.அன்பழகன், எம்.எல்.ஏ. தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



 


Read Entire Article