
சென்னை,
பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஆவார். 'அக்கட அம்மாயி இக்கட அப்பா' என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் இவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக பிளாக்பஸ்டர் படங்களாக அமைந்தன.
இவர் தற்போது ஹரி ஹர வீர மல்லு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். கிரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ள இந்த படத்திற்கு கீரவாணி இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை 24-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் ஒரு பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி அதிக பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படத்தின் வெளியீட்டு உரிமைகள் நல்ல தொகைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் தணிக்கை வாரியம் 'ஹரி ஹர வீர மல்லு' படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. \