தஞ்சாவூர்,ஏப்.9: தஞ்சை உழவர் சந்தையில் துணை இயக்குநர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். தஞ்சை நாஞ்சிக்கோ ட்டை சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. அங்கு தஞ்சை அருகே உள்ள பகுதிகளை சேர்ந்த மருங்குளம், குருங்குளம், காராமணி, தோப்பு சாமிபட்டி, திருவையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த தோட்ட விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைவிக்கும் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.
இந்நிலையில் நேற்று சென்னை ஒழுங்குமுறை விற்பனை கூட துணை இய க்குனர் மோகன் தஞ்சை உழவர் சந்தையில் ஆய்வு செய்தார். இதில் உழவர் சந்தையில் விலை நிர்ணயம் குறித்தும், உழவர் சந்தையில் கடைகள் ஒதுக்கீடு செய்தல் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். உழவர் சந்தையில் கடைகள் ஒதுக்கீடு செய்துள்ளவர்களின் அடையாள அட்டையி னை ஆய்வு செய்தார். உழவர் சந்தையில் உள்ள விலைப்பட்டியல் பலகை, விலைகள் பார்வையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள விவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பூதலூரில் உள்ள ஒழு ங்கு முறை விற்பனை கூட த்தினை ஆய்வு செய்துஉள் வரத்து விவரம் மற்றும் வெளிவரத்து விவரம் குறி த்து ஆய்வு மேற்கொண்டார். உள்வரத்தினை அதி கரிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவு றுத்தினார். கிடங்கின் கொள்முதலினை முழுமையாக பயன்படுத்திட அறிவுறுத்தினார். ஆய்வின்போது துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) சுதா, உழவர் சந்தை வேளாண் அலுவலர் ஜெய்ஜி பால், உதவி வேளாண் அலுவலர்கள் உழவர் சந்தை மற்றும் செயலர், ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் சரசு, ஆகியோர் உடன் இருந்தனர்.
The post தஞ்சை உழவர் சந்தையில் அதிகாரி திடீர் ஆய்வு appeared first on Dinakaran.