*நெடுஞ்சாலைத்துறை அதிரடி நடவடிக்கை
*போலீஸ் குவிப்பால் பரபரப்பு
தஞ்சாவூர் : தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் நடைபாதை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளை நேற்று அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றம் செய்யப்பட்டது. இதையொட்டி அப்பகுதியில் போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாஞ்சிக்கோட்டை ஊராட்சி இருந்து வருகிறது. நாஞ்சிக்கோட்டை ஊரா ட்சி அண்ணாநகர் முதல் புறவழிச்சாலை மேம்பாலம் வரை, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை அகலப்படுத்தப்பட்டு, இருபுறமும் மழைநீர் செல்லும் வகையில் வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டது.மேலும், சாலையின் இருபுறமும் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில், நடைபாதை அமைக்கப்பட்டு எவர்சில்வர் பைப்புகளால் தடுப்புகளால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாலையின் இருபுறமும் உள்ள நூற்றுக்கணக்கான கடைகாரர்கள், நடைபாதையை ஆக்கிரமித்து அதில் கடைகளை கட்டியும், மேற்கூரைகளை அமைத்துள்ளனர். இதனால் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு வந்தது. பொதுமக்கள் அப்பகுதியில் செல்வதற்கு சிரமப்பட்டு வந்தனர்.
எனவேசாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள பகுதிகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் ஏற்கெனவே முறைப்படி அறிவிப்புகளை வழங்கினர். மேலும், ஆக்கிரமிப்புகளை வியாபாரிகள் தாங்களாகவே அகற்றிக் கொள்ளுமாறு, ஒலி பெருக்கி மூலம் அறிவித்தனர். ஆனால் கடைக்காரர்கள் முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை நெடுஞ்சாலைத்துறை கோட்ட உதவி இயக்குநர் கீதா, உதவிப் பொறியாளர் லெட்சுமிப்பிரியா மற்றும் வல்லம் காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ்குமார் தலைமையில், அண்ணாநகர் முதல் புறவழிச்சாலை மேம்பாலம் வரை இரண்டரை கிலோமீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆக்கிரமிப்புகளை அகற்ற இரண்டு பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி நெடுஞ்சாலைத்துறையினர் கடைகளின் மேற்கூரைகளை இடித்து அகற்றினர்.
மேலும் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளின் முன்பாக, நெடுஞ்சாலைத்துறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த இரும்பு பைப், கம்பிகள் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் அந்த பகுதியில் முன்கூட்டியே மின்சாரம் நிறுத்தப்பட்டது. ஆக்கிரமி ப்பு அகற்றும் பணியில்நெடு ஞ்சாலைத்துறை பணியாள ர்கள் மற்றும் 50க்கும் மேற்ப ட்ட போலீஸார்பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் appeared first on Dinakaran.