தஞ்சாவூர் டைடல் நியோ பூங்காவில் நிறுவனங்களின் தொடக்கவிழா

6 months ago 30

 

தஞ்சாவூர், அக்.18: தஞ்சாவூர் டைடல் நியோ பூங்காவில் நிறுவனங்களின் தொடக்க விழா நேற்று தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா, தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகர், டி.கே.ஜி நீலமேகம் தஞ்சை மாநகராட்சி மேயர் சன் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

தஞ்சையில் ரூ. 30.50 கோடி மதிப்பில், 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் புதிதாக தஞ்சாவூரில் டைடல் பார்க் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா கடந்த மாதம் நடைபெற்றது. அதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக கடந்த மாதம் சென்னையில் இருந்து திறந்து வைத்தார். திறந்த 15 நாட்களிலே இந்த டைடல் பூங்காவில் உள்ள அனைத்து அலுவலகங்களும் முழுமையாக நிரம்பியது. இந்த நிலையில் நிறுவனங்களின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தனியார் நிறுவன உரிமையாளர்கள் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post தஞ்சாவூர் டைடல் நியோ பூங்காவில் நிறுவனங்களின் தொடக்கவிழா appeared first on Dinakaran.

Read Entire Article