தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தின் சார்பாக தூய்மை இந்தியா சேவை திட்டம் விழிப்புணர்வு பேரணி

2 months ago 10

 

தஞ்சாவூர், நவ. 23: தூய்மை இந்தியா சேவை திட்டத்தை முன்னிட்டு தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தின் சார்பாக, விழிப்புணர்வு பேரணி நடந்தது. ‘தூய்மை இந்தியா சேவை திட்டம்’ நவம்பர் மாதம் 16ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தின் சார்பாக, விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்தபேரணி, தஞ்சாவூர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தொடங்கி, அரசு மருத்துவமனை, மாநகராட்சி அலுவலகம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் புதுஆற்றின் வழியாக சென்று தலைமை அஞ்சலகத்தில் முடிவடைந்தது.

இதில், தஞ்சாவூர் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தங்கமணி, தஞ்சாவூர் அஞ்சல் கோட்ட துணை கண்காணிப்பாளர் உமாபதி, தஞ்சாவூர் தலைமை முதுநிலை அஞ்சலக அலுவலர் பழனிசாமி, தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தின் உதவி அஞ்சலக அதிகாரி கார்த்திகேயன், தஞ்சாவூர் வடக்கு உபகோட்ட அஞ்சல் அதிகாரி கார்த்திகேயன், தஞ்சாவூர் தெற்கு உபகோட்ட அஞ்சல் அதிகாரி கணேஷ்குமார், தஞ்சாவூர் அஞ்சல் கோட்ட அனைத்து தரப்பு ஊழியர்கள், தபால்காரர்கள் மற்றும் பன்முகதிறன் ஊழியர்கள் பேரணியில் பங்கு கொண்டனர்.

The post தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தின் சார்பாக தூய்மை இந்தியா சேவை திட்டம் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Read Entire Article