சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள் 3 பேர் சேர்ந்து, அப்பள்ளியில் கல்வி பயின்று வரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இதனை கண்டித்து, அதிமுக ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்டங்களின் சார்பில், நாளை காலை 10 மணியளவில், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டம், கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி, தலைமையில் நடைபெறும். இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட் அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும்.
The post பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அதிமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு appeared first on Dinakaran.