தங்கம் விலை ரூ.67 ஆயிரத்தை கடந்தது... மீண்டும் புதிய உச்சத்தில் விற்பனை

1 day ago 3

சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து காணப்படுவதால், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 20-ந் தேதி ஒரு சவரன் ரூ.66,480-க்கு விற்பனை ஆனது. இது அப்போதைய உச்சபட்சமாக பார்க்கப்பட்டது. அதற்கு மறுநாளே விலை குறையத் தொடங்கியது.

தொடர்ந்து 25-ந் தேதி வரை விலை குறைந்து வந்த நிலையில், கடந்த 26-ந் தேதியில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி பயணிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.66,880-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. அதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.67 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.67,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,425-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இதன் மூலம் மீண்டும் இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டு இருக்கிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.113-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.

Read Entire Article