தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 குறைந்தது

7 hours ago 2

சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.280 குறைந்தது. கடந்த மாதம் 22ம் தேதி தங்கம் விலை பவுன் ரூ.74,320க்கு விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய உச்சமாகும். அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 21ம் தேதி தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.71,440க்கு விற்றது. தொடர்ந்து, நேற்று முன்தினம் தங்கம் விலை மேலும் உயர்வை சந்தித்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,975க்கும், பவுனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு பவுன் ரூ.71,800க்கும் விற்பனை ஆனது. தங்கம் விலை மீண்டும் பவுன் ரூ.72 ஆயிரத்தை நெருங்கியது. இந்நிலையில், நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.8,940க்கும், பவுனுக்கு ரூ.280 குறைந்து ஒரு பவுன் ரூ.71,520க்கும் விற்பனையானது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் நேற்று குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.111க்கும், கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

The post தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 குறைந்தது appeared first on Dinakaran.

Read Entire Article