தங்கப்பனை விருது வென்ற டென்செல் வாஷிங்டன்

4 hours ago 4

78-ஆவது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் இருந்து திரைத் துறை பிரபலங்கள், ரசிகர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளனர். இந்த விழா கடந்த மே 13-ந் தேதியில் இருந்து வருகிற 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் மதிப்புமிக்க வாழ்நாள் சாதனையாளர் விருதான தங்கப்பனை விருது நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்ட டென்செல் வாஷிங்டனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை அவரது நெருங்கிய நண்பரும் 'ஹையஸ்ட் 2 லோவெஸ்ட்' படத்தின் இயக்குனருமான ஸ்பைக் லீ அவருக்கு வழங்கினார்.

இந்த விழாவில் டென்செல் வாஷிங்டன் நடித்த 'ஹையஸ்ட் 2 லோவெஸ்ட்' படம் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. 70 வயதான டென்செல் வாஷிங்டன் 9 முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு அதில் 2 முறை விருது வாங்கியுள்ளார். இவருக்கு இது முதல் தங்கப்பனை விருது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article