தங்க நகை அடமானம் புதிய விதிகளால் சாமானியர்களின் தலையில் இடியை இறக்கிய ஆர்பிஐ: அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

3 hours ago 1

சென்னை: தமிழக நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு: தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களே பெரும்பாலும் தங்களது அவசர தேவைகளுக்கு தங்க நகைக் கடன் போன்றவற்றைச் சார்ந்திருக்கும் சூழலில் அதன் மீது மத்திய ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறைகள் சாமானிய மக்களை பாதிக்கும் செயலாக அமைந்துள்ளது.

அடமானம் வைத்த நகையை முழுவதுமாக மீட்ட பிறகே மீண்டும் அந்த நகையை அடமானம் வைக்க முடியும் என்ற புதிய விதிமுறையைக் கடந்த மாதம் ஆர்பிஐ கொண்டு வந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், தற்போது மேலும் 9 புதிய விதிமுறைகள் என்ற பெயரில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது நேரடியாக ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் செயலாகும். ஆர்பிஐ உடனே இத்தகைய கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post தங்க நகை அடமானம் புதிய விதிகளால் சாமானியர்களின் தலையில் இடியை இறக்கிய ஆர்பிஐ: அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article