ராயக்கோட்டை, அக்.24: ராயக்கோட்டையில் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். தக்காளி சாகுபடியில் நிரந்தர வருமானம் கிடைப்பதாலும், விற்றவுடன் பணம் கிடைப்பதாலும், அதனை பயிரிடுவதில் ராயக்கோட்டை பகுதி விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக நிலத்தை தயார் செய்து, சொட்டுநீர் பாசன குழாய் பதித்து, அதற்கு மேல் மல்ச்சிங் சீட் என்னும் பாலிதீன் பேப்பரை போர்த்தி, அதில் துளையிட்டு தக்காளி நாற்றுகளை நடுகின்றனர். அதற்காக ஒரு தக்காளி நாற்று ஒரு ரூபாய் என ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் நாற்றுகள் வரை வாங்கி நடுகின்றனர்.
அதோடு தக்காளி செடிகள் உயரமாக வளர்ந்ததும், உடைந்து போகாமல் இருக்க தைல மரக்குச்சிகளை வாங்கி நடுகின்றனர். அந்த குச்சி ஒன்று ₹20 முதல் ₹60 வரை விற்பனை செய்வதை, ஏக்கருக்கு 1,500 குச்சி வரை வாங்கி நடுகின்றனர். எனவே தக்காளியை சாகுபடி செய்ய ஏக்கருக்கு ஒன்றரை லட்ச ரூபாய் வரை செலவு ஆகிறது. இந்நிலையில் தற்போது மார்க்கெட்டில் 25 கிலோ எடை கொண்ட ஒரு கிரேடு தக்காளி ₹700க்கு குறையாமலும், விலை அதிகரித்து கிரேடு ₹1500 வரை விற்பனையாவதால், தக்காளி சாகுபடியில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
The post தக்காளி சாகுபடியில் விவசாயிகள் மும்முரம் appeared first on Dinakaran.