தகுதி நீக்க தீர்மானம் கொண்டு வந்து நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணி நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு

4 hours ago 1

புதுடெல்லி,

நீதிபதி யஷ்வந்த் வர்மா, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த போது அவரது வீட்டில் கட்டுக்கடாக பணம் சிக்கியது. இது, நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முறைகேடாக சம்பாதித்த பணத்தையே நீதிபதி வர்மா பதுக்கி வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனினும் தன் மீதான குற்றச்சாட்டுக்களை நீதிபதி வர்ம மறுத்தார். இதற்கிடையே, யஷ்வந்த் ஷர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றம் செய்தார். அங்கு அவருக்கு பணி ஒதுக்க வேண்டாம் என்றும், அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அறிவுறுத்தினார்.

மேலும், நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சிக்கிய விவகாரம் குறித்து விசாரிக்க, குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் அமைத்தது. டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா, டெல்லி தீயணைப்பு படை தலைவர் அதுல் கார்க் உள்ளிட்ட 50 பேரிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், அவரை பதவியில் இருந்து நீக்கும்படி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. வர்மாவை பதவி நீக்க வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் 'இம்பீச்மென்ட்' எனப்படும், பணி நீக்க தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.

தீர்மானத்தை கொண்டு வருவதற்கு, மக்களவையில் 100 எம்.பி.,க்களின் ஆதரவும், மாநிலங்களவையில், 50 எம்.பி.க்களின் ஆதரவும் தேவை. இதற்கான பணிகள் துவங்கி உள்ளன. மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21 முதல் ஆகஸ்ட் 22 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் பணி நீக்க தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பணி நீக்க தீர்மானம் கொண்டு வரும் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சிகள் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பணி நீக்க தீர்மானம் எளிதாக நிறைவேறும் எனத்தெரிகிறது.

Read Entire Article