தகாத உறவு கண்டிப்பால் இளம்பெண் தற்கொலை

1 month ago 6

கிருஷ்ணகிரி, நவ.21: கெலமங்கலம் பி.தின்னூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவாஜி. இவரது மனைவி சந்தியா(19). இவர்களுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இதனிடையே, அதே பகுதியைச் சேர்ந்த புனித்(25) என்ற வாலிபருடன் சந்தியாவுக்கு தகாத உறவு ஏற்பட்டது. இதனை சிவாஜி தட்டிக் கேட்டதால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக, திருமணமான ஒரு மாதத்திலேயே, கணவனை பிரிந்து, சந்தியா தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.

இந்நிலையில், தகாத உறவை கைவிடும்படி, சந்தியாவை அவரது தாய் சரஸ்வதி கண்டித்துள்ளார். இதனால் சந்தியா மனவேதனையில் இருந்தார். கடந்த திங்கட்கிழமை இரவு, வழக்கம் போல் தனது அறைக்கு படுக்க சென்ற சந்தியா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மறுநாள் காலை இதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், கெலமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடம் வந்த போலீசார், சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 6 மாதங்களே ஆவதால், இதுபற்றி ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.

The post தகாத உறவு கண்டிப்பால் இளம்பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article