
விக்கிரவாண்டி,
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் அரசியல் மாநாடு வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இம்மாநாட்டுக்காக கடந்த 4-ந்தேதி பந்தல் கால் நடப்பட்டது.இம்மாநாட்டுக்காக மொத்தம் 176 ஏக்கர் பரப்பளவில் இடத்தை தேர்வு செய்துள்ளனர். இதில் 90 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைய உள்ளது. மீதமுள்ள இடங்கள் மாநாட்டுக்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கான மேடை அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கான பாதுகாப்பு குறித்து ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்தும் பங்கேற்றுள்ளார்.