டெஸ்ட் கிரிக்கெட்: மோசமான சாதனை பட்டியலில் ஸ்டீவ் வாக், பாண்டிங் உடன் இணைந்த ஜோ ரூட்

7 months ago 23

கிறிஸ்ட்சர்ச்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 348 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக வில்லியம்சன் 93 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷிர் விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, ஹாரி புரூக்கின் சதத்தின் உதவியுடன் 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்கள் அடித்துள்ளது. புரூக் 132 ரன்களுடனும், ஸ்டோக்ஸ் 37 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முன்னதாக இந்த போட்டி இங்கிலாந்து நட்சத்திர பேட்ஸ்மேனான ஜோ ரூட்டின் 150-வது டெஸ்டாக அமைந்தது. ஆனால் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 4 பந்துகளை எதிர்கொண்ட அவர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தங்களுடைய 150-வது போட்டியில் டக் அவுட் ஆன வீரர்களின் மோசமான சாதனை பட்டியலில் ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங் உடன் இணைந்துள்ளார்.

Read Entire Article