டெஸ்ட் கிரிக்கெட்: ஜாகீர் கான், இஷாந்த் சர்மாவின் வாழ்நாள் சாதனையை தகர்த்த ஜடேஜா

2 months ago 13

மும்பை,

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டேரில் மிச்செல் 82 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர். இதனையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.

முன்னதாக இந்த இன்னிங்சில் எடுத்த 5 விக்கெட்டுகளையும் சேர்த்து ஜடேஜா தம்முடைய டெஸ்ட் கெரியரில் இதுவரை 314 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது இடத்தில் இருந்த ஜாகீர் கான், இஷாந்த் சர்மாவின் வாழ்நாள் சாதனையை உடைத்துள்ள ஜடேஜா புதிய சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன் ஜாகீர் கான் மற்றும் இஷாந்த் சர்மா தலா 311 விக்கெட்டுளுடன் 5-வது இடத்தில் இருந்தனர். தற்போது அந்த இருவரின் வாழ்நாள் சாதனைகளை உடைத்துள்ள ஜடேஜா அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வரிசையில்  முதல் 5 இடத்திற்குள் நுழைந்து அசத்தியுள்ளார்.

அந்த பட்டியல்:

1. அனில் கும்ப்ளே: 619 விக்கெட்டுகள்

2. ரவிச்சந்திரன் அஸ்வின்: 533 விக்கெட்டுகள்

3. கபில் தேவ்: 434 விக்கெட்டுகள்

4. ஹர்பஜன் சிங்: 417 விக்கெட்டுகள்

5. ரவீந்திர ஜடேஜா: 314 விக்கெட்டுகள்

Read Entire Article