சென்னை: அதிமுக சார்பில் புதுடெல்லியில் ரூ.10 கோடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டிடத்தை காணொலி வாயிலாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி திறந்துவைத்தார்.
அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலிதா பொறுப்பேற்ற பிறகு முதல் தேர்தலிலேயே தமிழக முதல்வரானார். அதனைத் தொடர்ந்து மக்களவை தேர்தலிலும் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவளித்து தேசிய அரசியலிலும் அதிமுகவை பலப்படுத்தினார். இந்நிலையில், கட்சிப் பணிகளை மேற்கொள்ள புதுடெல்லியில் அதிமுக அலுவலகம் திறக்க வேண்டும் என்று ஜெயலலிதா விரும்பினார்.